சூடான செய்திகள் 1

சப்ரகமுக பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு சவுதி அரசாங்கத்தின் உதவி

(UTV|COLOMBO) சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மருத்துவபீடம் அமைக்கப்படவுள்ளது.

இதற்காக சவுதி அரேபியா 19 கோடி ரூபா நிதியை கடனாக வழங்கவுள்ளது.

சவுதி அரசாங்கத்திடம் இருந்து கடன் பெறும் உடன்படிக்கை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தலைமையிலான குழுவினர் அண்மையில் சவுதி சென்றிருந்தனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இதுதொடர்பில் உடன்பாடு எட்டப்பட்டது.

இதற்கமைவாக ,நவீன வசதிகளுடன் மாணவர்களுக்கு கல்வி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் நாட்டின் மருத்துவக் கல்வியை விரிவாக்குவதற்கு அரசாங்கம் ஆரம்பித்துள்ள பிரதான திட்டமாக இது அமைந்துள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக ராஜகிரிய வீதியில் வாகன நெரிசல்

2019 ஆம் ஆண்டின் முதலாவது கட்சி தலைவர்களுக்கான கூட்டம் இன்று

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு இன்று