வகைப்படுத்தப்படாத

தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்

 

(UDHAYAM, COLOMBO) – தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் யுன் பயுங் செ இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இலங்கை வரும் அவர் மூன்று தினங்களுக்கு இலங்கையில் தங்கி இருப்பார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகளின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயத்தின் போது அவர் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டவர்களை சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Kalu Ganga rising to flood level

முன்னாள் பிரதி அமைச்சர் லான்சா இன்று எடுத்த தீர்மானம்

புட்டின் மீண்டும் வெற்றி பெற்றதற்கு ட்ரம்ப் வாழ்த்து