கேளிக்கை

வதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா…

(UTV|INDIA) இந்தியில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

சமீபத்தில் நடந்த விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.

வயிறு பெரிதாக இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல. திருமணத்துக்கு பிறகு தாய்மை முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கவில்லை” என்றார்.

 

 

Related posts

ஒலிவியா நியூட்டன் ஜோன் காலமானார்

தர்பார் கொடுமையே நயனுக்கு கடைசியாக இருக்கட்டும்

பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்