(UTV|FRANCE) பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது.
பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதுடன், பேராலயத்துக்குள் உள்ள கலைப்படைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
தேவாலயத்தில் நடந்து வந்த சீரமைப்பு பணிகள் காரணமாக தீப்பிடித்திருக்கக்கூடும் என கருதப்படுகிறது. எனினும் உண்மையான காரணத்தை கண்டறிய முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் தேவலாயத்தை புனரமைப்பதற்காக நிதி குவிய தொடங்கி உள்ளது. பிரான்சை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் மட்டும் 300 மில்லியன் யூரோ (வழங்கி இருப்பது) குறிப்பிடத்தக்கது.