(UTV|PAKISTAN) பாகிஸ்தானில் நிலவும் புயலுடனான கடும் மழை வானிலை காரணமாக 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன், சிலர் காணாமல் போயுள்ளதாகவும் அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் பலொசிஸ்தன் மாகாணத்திலேயே அதிக பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக, பாகிஸ்தான் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த மாகாணம் உள்ளிட்ட பஞ்சாப், சிந்து உள்ளிட்ட, அனர்த்தம் ஏற்பட்ட மாகாணங்களில் தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இத்துடன், பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதாக பாகிஸ்தான் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Video: Torrential rains, duststorm lash #Pakistan; 26 dead https://t.co/KX5aLq4Ma4
(Courtesy: Hira Jawad Naqvi)#Karachi pic.twitter.com/JmYBDXG12Q
— Khaleej Times (@khaleejtimes) April 16, 2019