வகைப்படுத்தப்படாத

மறுசீரமைக்க உள்ள நேட்ரே டேம்-பிரதமர் இம்மானுவேல் (VIDEO)

(UTV|FRANCE) ப்ரான்ஸில் தீ அனர்த்தத்தினால் சேதமடைந்த நேட்ரே டேம் தேவாலயத்தை மறுசீரமைக்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ப்ரான்ஸின் புகழ்பெற்ற தேவாலயமான நோட்ரே-டேமில் நேற்று பாரிய தீப்பரவல் ஏற்பட்டது.
850 வருடங்கள் பழைமையான இந்த தேவாலயத்தின் கட்டிட முகப்பு மற்றும் கூரை என்பன தீயினால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனினும் அதன் பிரதான கட்டமைப்பு எந்த பாதிப்புக்கும் உள்ளாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான தீயணைப்பு படை வீரர்களினால் சுமார் 9 மணிநேரத்தின் பின்னர் குறித்த தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு தீயணைப்பு படை வீரர் காயமடைந்துள்ளார்.
எவ்வாறிப்பினும், குறித்து தீப்பரவல் ஏற்பட்டமைக்கான உண்மையான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் துன்பகரமானது என ப்ரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேவாலயத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்காக ப்ரான்ஸ்  செல்வந்தரான ப்ரான்சுவா என்றி பீனல்ட்   என்பவர்  100 மில்லியன் யூரோவை வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Related posts

சிலிண்டர் வெடித்து கட்டிடம் இடிந்த விபத்தில் 7 பேர் பலி

ஹட்டனில் கடையடைப்பு குப்பைகளை அகற்றகோரி பாரிய ஆர்பாட்டம்

அமெரிக்காவின் பாதீட்டிலும் சர்ச்சை