வகைப்படுத்தப்படாத

பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ

(UTV|FRANCE) பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

850 வருடங்கள் பழைமைவாய்ந்த குறித்த பேராலய கட்டடத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

எனினும், மணிக்கோபுரங்கள் இரண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேராலயத்துக்குள் உள்ள கலைப்படைப்புக்களைப் பாதுகாக்கும் முயற்சியில் தொடர்ந்தும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது மிகமோசமான சோக நிகழ்வு என பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார்.

 

Related posts

වේල්ලක් කඩාවැටී හයදෙනෙකු මරුට

நுவரெலியாவில் வீசிய பலத்த காற்றால் 21 வீடுகள் சேதம்

රුපියලේ අගය පහත වැටිමක්