வணிகம்

இலங்கையும் உலக வங்கியும் உடன்படிக்கைகளில் கைச்சாத்து

(UTV|COLOMBO) இலங்கையும் உலக வங்கியும் இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த உடன்படிக்கைகள் சுவாத்திய மாற்ற நெருக்கடிகளிலிருந்து மீண்டெழும் ஆற்றலை விருத்தி செய்வதுடனும், சிறு விவசாயகளின் உற்பத்தித்திறனை அதிகரித்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகின்றது.

இரு உடன்படிக்கைகளும் 15 கோடி டொலர் பெறுமதியானவை என உலக வங்கி அறிவித்துள்ளது.

நேற்று வொஷிங்டனில் இடம்பெற்ற நிகழ்வில் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கு பொறுப்பான துணைத்தலைவர் ஹாட்விக் ஷாபர், Hartwig Schafer, நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.சமரதுங்க ஆகியோர் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

தரம் குறைந்த எரிவாயு கொள்கலன்களை சந்தைப்படுத்தவில்லை

தொடர்ந்தும் வாகன இறக்குமதிக்கு தடை