சூடான செய்திகள் 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் தவிர, இன்றைய தினம் மேலதிகமாக 250 பேரூந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

இன்றைய தினம் 19 ரயில்கள் வழமைக்கு மாறாக சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

Related posts

தொடர்ச்சியாக குறைவடைந்து வரும் தேயிலை விலை…

கேகாலை பொதுச் சந்தையில் தீ விபத்து

ஐ.தே.கவை தன்வசப்படுத்த ஜனாதிபதி முயற்சி – முஜிபூர் ரஹ்மான்