(UTV|ISRAEL) உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது.
நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ‘பேரேஷீட்’ என்னும் விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது.