விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…

(UTV|INDIA) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 25வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களை பெற்றது.
இந்த அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களை பென்ஸ் ஸ்டொக் பெற்றுக் கொடுத்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்துள்ளது.

Related posts

நிறவெறி கருத்துகள் சர்ச்சையில் இங்கிலாந்து வீரருக்கு தடை

சாமரி அதபத்து தொடக்க பெண்கள் CPL போட்டிக்கு

பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்