சூடான செய்திகள் 1

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

(UTV|COLOMBO) களுகங்கையில் நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட 2 லட்சத்து 81 ஆயிரத்து 236 பேர் சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக களுகங்கையின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால் களுகங்கையில் நிலத்தடி நீர் கலந்துள்ளது.
அதன்காரணமாக களுத்துறை – கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் விநியோகிக்கப்படும் நீரை அருந்த வேண்டாம் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தினால் விநியோகிக்கப்படும் தொடங்கொட, களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு நீர்தாங்கிகள் ஊடாக சுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.
இதேவேளை, நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக அம்பாறை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Related posts

பிரபல நகைச்சுவை நாடக நடிகர் மேடையில் உயிரிழப்பு: இதுவும் ஒருகாட்சி என ரசித்த ரசிகர்கள் (video)

மே 7ம் திகதியே விடுமுறை

ஜனாதிபதி நாடு திரும்பினார்