வகைப்படுத்தப்படாத

புகையிரதம் தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு  சென்ற சரக்கு ரெயில் ஒன்று நேற்று இரவு கோங்யி நகர் அருகே சரக்கு ரயில் சென்றபோது திடீரென தடம் புரண்டது.

குறித்த விபத்தில் சிக்கி 6 பேர் மாயமாகினர்.

தகவலறிந்து அங்கு சென்ற ரெயில்வே துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். குறித்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

 

Related posts

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

லண்டன் கட்டிட தீ விபத்து – பலியானவர்கள் அடையாளம் காண முடியாத நிலையில்…

மருத்துவ சபைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்