கிசு கிசு

கழிப்பறையில் இரகசிய கமெரா…

கழிப்பறையில் இரகசிய கமெராவை பொருத்தியதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள கடற்படை அதிகாரிக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வொஷிங்டனில் அமைந்துள்ள நியூஸிலாந்து தூதரகத்தில் கடமையாற்றும் உயர் கடற்படை அதிகாரிக்கு எதிராகவே இவ்வாறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஆபாசக் காணொளியைப் பதிவுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நியூஸிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்போது பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் காணொளிகள் கடற்படை அதிகாரியின் மடிக்கணினியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

 

 

 

 

Related posts

“கோட்டாவின் தாய்லாந்து செலவு கோடிக்கணக்கில், இரண்டு வாரங்களில் மீண்டும் இலங்கைக்கு”

நியமிக்கப்படவுள்ள ஆறு நாடுகளுக்கான இராஜதந்திரிகள் விபரம்

கொரோனா வைரஸ் தொற்றினை கண்டறியும் மோப்ப நாய்கள்