சூடான செய்திகள் 1

தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவு…

(UTV|COLOMBO) தென் மாகாண சபையின் பதவிக்காலம் ​நேற்று (10) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. தென் மாகாண சபையின் அதிகாரம் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதேவேளை, கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன், வடமேல் மற்றும் வட மாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.

அந்நிலையில், மேல் மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதுடன் ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

 

Related posts

போதைப்பொருள் தொடர்பிலான தகவல்களை வழங்க அவசர தொலைபேசி இலக்கம்

எதிர்வரும் 09,10ம் திகதிகளில் ரயில்வே பணிப்புறக்கணிப்பு

கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது