வகைப்படுத்தப்படாத

இந்திய மக்களவைக்கான தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று…

(UTV|INDIA) இந்திய மக்களவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (11ஆம் திகதி) ஆரம்பமாகின்றது.

91 மக்களவை உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஆந்திரபிரதேஷ், தெலுங்கானா உள்ளிட்ட 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் இடம்பெறுகின்றது.

இந்திய மக்களவைக்கான தேர்தல் இன்று ஆரம்பமாகி, மே மாதம் 19 ஆந்திகதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்திய மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இந்தத் தேர்தல் இடம்பெறுகின்றது.

மேலும் இம்மாதம் 11, 18, 23, 29 ஆம் திகதிகளிலும் அடுத்த மாதம் 6, 12, 19 ஆம் திகதிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றதோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதற்கமைய வாக்கெண்ணும் பணிகள் மே மாதம் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.

 

Related posts

சீன குழு – பிரதமர் சந்திப்பு

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி