வணிகம்

மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து…

(UTV|COLOMBO) 100 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட மற்றும் கனேடிய வர்த்தக சபையின் ஆசிய வலய பணிப்பாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.

இதற்கமைய, இந்த வருடம் நவம்பர் மாதத்திற்கு முன்னர், 10 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்காக மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தை மையப்படுத்தி இதற்கான முதலாவது செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

 

 

 

 

Related posts

தென்மாகாணத்தில் இறால் , கடல்நண்டு ஏற்றுமதி களப்பு அபிவிருத்தி

தங்கத்தின் விலையிலும்..

கச்சா எண்ணெய் விலையில் சரிவு