சூடான செய்திகள் 1

வாகன ஹோர்ண்கள் வெளிச்ச சமிக்ஞைகளை அப்புறப்படுத்த கால அவகாசம்…

(UTV|COLOMBO) மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் அதிக இரைச்சலுடன் பயத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வாகன ஹோன்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிசார் தயாராகின்றனர்.

இதேபோன்று, தமது மோட்டார் வாகனத்தில் வெளிச்சம் சம்பந்தமான விதிமுறைகளை மீறும் வகையிலான கருவிகளைப் பொருத்தியவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அத்தகைய சட்டவிரோத உபகரணங்களை அப்புறப்படுத்த 3 மாதம் காலம் வரையான கால அவகாசம் வழங்கப்படும் என போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.அவர் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தகவல் அறிவித்தார். புதிய சட்டங்கள் ஜுலை முதலாம் திகதி அமுலுக்கு வருகின்றன.

 

 

 

Related posts

வடக்கிற்கான புகையிரத சேவை பாதிப்பு

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் 30 தொழிற்சங்க நடவடிக்கையில்…

ஹப்புத்தளையில் மண்சரிவு