வணிகம்

தேங்காயை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) இம்முறை மேலதிகமாக பெறப்படும் தெங்கு அறுவடையை வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்புவதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

தேங்காய்களுக்கு உரிய விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தேங்காய்களை மொத்தமாக கொள்வனவு செய்யும் வர்த்தகர்கள் தேங்காய் ஒன்றை 30 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதாக பெருந்தோட்டத்துறை அமைச்சின் செயலாளர் ஜே.ஏ.ரஞ்சித் தெரிவித்தார்.வெளிநாட்டுச் சந்தைக்கு தேங்காய்களை ஏற்றுமதி செய்வதற்காக ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 

Related posts

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி…

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் வரி குறைப்பு