சூடான செய்திகள் 1

நாளை நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இடம்பெறாது…

(UTV|COLOMBO) மின் துண்டிப்பு நாளை நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். மின்சாரத்தை தனியார் நிறுவனம் மூலம் கொள்வனவு செய்வதினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என்று ஊடகங்களில் வெளியாகி இருந்த செய்தி குறித்து குறிப்பிட்ட அமைச்சர் தனியார் துறையில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது இலாபகரமானது என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் சிங்கள, தமிழ் புத்தாண்டு காலத்தில் எந்தவித மின் வெட்டும் இருக்காது. அத்துடன் வெசாக் காலத்தில் பந்தல்களுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மின் துண்டிப்பு நாளை நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்ச்ர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.மின்சக்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் உரையாற்றினார். தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

 

Related posts

மேல் மாகாணம் அதிக அபாயமுள்ள வலயமாக பிரகடனம்

பாழடைந்த வீட்டிலிருந்து அடையாள அட்டைகள் மீட்பு

உலகின் மிகபெரிய கிரிக்கெட் மைதானம் : நரேந்திர மோடியின் வாக்கு