(UTV|COLOMBO) பெண்ணொருவரின் ஊடுருவல் காரணமாக இலங்கை கிரிக்கெட் அணிக்குள் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் இலங்கை கிரிக்கெட் அணியின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டதுடன், திட்டமிட்டு அணியின் தோல்விக்கு பிரதான காரணமாகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த இந்த பெண் இந்தியாவில் செயற்படும் பிரபல சூதாட்டக்காரர்களுடன் நெருங்கிய தொடர்பினையும் அவர்களின் தேவைக்கு ஏற்ப செயற்படுவதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த பெண் இலங்கை அணியின் பல வீரர்களுடன் பாலியல் உறவுகளையும் பேணியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹம்பாந்தோட்டையில் இலங்கை – ஸிம்பாப்பே அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இலங்கை அணி அதிர்ச்சித் தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் இலங்கை கிரிக்கெட்டில் ஊழல்கள் இடம்பெறுவதாக சந்தேகம் கொண்ட ஐசிசி 18 தடவைக்கு மேல் விசாரணைகளை மேற்கொண்டது.
அதன்போது சூதாட்டக்காரர்களின் பினாமியாக பெண்ணொருவர் செயற்படும் தகவல் அம்பலமாகி உள்ளது.
40 வயதான குறித்த பெண் இலங்கை கிரிக்கட்டுக்கு பாரிய அச்சுறுத்தலாக இருந்து, கிரிகட்டிற்கும் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வந்துள்ளமை ஐசிசியின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தோல்வியடைந்த போட்டிகளில் இந்த பெண் மூலம் மோசடிகள் எவ்வாறு , எங்கு செய்யப்பட்டு இருக்கும் என்ற கோணத்தில் தற்போது ICC ஊழல் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.