சூடான செய்திகள் 1

UPDATE-மாத்தறை-பெலியத்தை புகையிரத சேவை ஆரம்பம்

(UTV|COLOMBO)மாத்தறையில் இருந்து பெலியத்தை வரையிலான ரயில் சேவை சற்று முன்னர் ஆரம்பமானது.

இன்று காலை 8.30 மணி அளவில் மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்தை வரை முதலாவது பயணம் ஆரம்பித்து வைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.


மாத்தறையிலிருந்து பெலியத்தை வரையிலான புகையிரத சேவை இன்று 8ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறித்த புகையிரத சேவை போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

இன்றைய தினம் காலை 08.30 மணியளவில் மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்தை வரை முதலாவது பயணம் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.

கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் செல்லும் புகையிரதம் இன்றைய தினம் முதல் பெலியத்த வரை சேவையை மேற்கொள்ளும்.

 

 

Related posts

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்

பதவி விலகிய மைதிரி: விஜயதாஸ தலைவராக!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்ட நற்சான்று பத்திரம்!