சூடான செய்திகள் 1

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

(UTV|COLOMBO) போக்குவரத்து சட்டங்களை மீறுதல் மற்றும் 105 டெசிபல் மீட்டரை விட அதிக சத்தத்துடன் ஒலி எழுப்புதல் தொடர்பில் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

அதிக சத்தத்தை எழுப்பும் ஒலி எழுப்பிகளுடனான வாகனங்களை சுற்றிவளைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த ஆலோசனை வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டமா அதிபருடன் தேர்தல் ஆணைக்குழு பேச்சு!

மழையுடனான வானிலை

ஜமாதே மில்லது இப்ராஹிம்; மேலும் இருவர் கைது