கேளிக்கை

அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி!!

(UTV|COLOMBO) உலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார்.

உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் திகதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மார்வெல் அந்தமை உருவாக்கி இருக்கிறார்.

இந்த பாடல் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

விஜய்சேதுபதி இப்படத்தில் அயன்மேனுக்கு தமிழில் டப்பிங் பேசியுள்ளார்.

அதுபோல், பிளாக் விடோவிற்கு ஆண்ட்ரியா டப்பிங் கொடுத்துள்ளார்.

மேலும் ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நடிகையை திருமணம் செய்த இயக்குனர் வேலு பிரபாகரன்

ஓவியாவுடன் திருமணமா?

பிரபல பாடகர் உலகை விட்டு பிரிந்தார்