சூடான செய்திகள் 1

சு.கட்சி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்களிப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் இன்று பிற்பல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரவு செலவு திட்டத்தின் வாக்களிப்பு குறித்து தீர்மானிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு இன்று மாலை கூடவுள்ளது.

இதேவேளை, வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக ஜே.வீ.பி ஏற்கனவே அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பரிசோதகர்கள்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின

சவேந்திர சில்வாவின் நியமனத்திற்கு ஆழ்ந்த கவலையை வெளியிட்டது கனடா