சூடான செய்திகள் 1

வெலே சுதாவின் மரண தண்டனை உறுதி…

(UTV|COLOMBO) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அசல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

அதன்போது குறித்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள் குழாம் தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் இவருக்கு 07.05 கிராம் போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை பிரதேசத்தில் வைத்து 2012ம் ஆண்டு ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட வெலே சுதாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

 

 

 

 

Related posts

கஞ்சிபானை இம்ரானின் தந்தை உள்ளிட்ட 06 பேர் மீண்டும் விளக்கமறியலில்

கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கு – 2018’ – 30 ஆம் திகதி ஆரம்பம்

மோல் சமிந்தவின் உதவியாளரான பெண்ணொருவர் கைது