வகைப்படுத்தப்படாத

சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர்.

சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

அந்த நிலையில் சுரங்கப்பாதைக்குள் வழக்கமான கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. ஏராளமான தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் சுரங்கத்துக்குள் வெடிவிபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சுரங்கம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

தொழிலாளர்கள் அனைவரும் உயிரை காப்பாற்றி கொள்ள அலறிஅடித்தபடி சுரங்கத்தை விட்டு வெளியேறினர். எனினும் தீயின் கோரப்பிடியில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

 

 

 

 

Related posts

பிரேசில் சிறை கலவரத்தில் 40 கைதிகள் உயிரிழப்பு

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் பதவி வெற்றிடம்!

செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் தேர்