சூடான செய்திகள் 1

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு விரைவில் நியமனம்

(UTV|COLOMBO) விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் மூவாயிரத்து 850 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதன்படி கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை மாணவ மாணவியருக்கு வர்ண விருது அளிக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார். நேற்று கொழும்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இவர்களுக்கான நியமனங்கள் எதிர்வரும் மே மாதம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

விளையாட்டுத்துறையில் திறமை சாலிகளை உருவாக்குவது அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் கூறினார்.

 

 

Related posts

ஜனாதிபதி சற்று முன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை

களனி பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் மீண்டும் 03ம் திகதி ஆரம்பம்

சாதாரண தரப் பரீட்சை நாளை(03) ஆரம்பம்