வகைப்படுத்தப்படாத

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா

(UDHAYAM, COLOMBO) – வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தல் நிகழ்வு தற்போது நடைபெறுகிறது.

திருப்பலியை யாழ் கத்தோலிக்க குருமார் நடத்திவருகின்றனர்.

நேற்று மாலை 4.30 மணியளவில் ஆலயத்தின் பரிபாலகர் அன்டனி ஜெயராஜ் தலைமையில் கொடியேற்றப்பட்டதோடு விழா ஆரம்பமானது.

இன்று காலை 6.00 மணிக்கு திருச்செபமாலை இடம்பெற்றத 6.30 மணிக்கு ஆயர் குருக்கள் மற்றும் ஏனைய பிரமுகர்கள் வரவேற்கப்பட்டனர் 6.45 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

காலையில் நிகழும் இந்த சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தலுடன் திருவிழா நிறைவுக்கு வரும்.

வருடாந்தம் நடைபெறும் இந்த திருவிழாவில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வருகைதரும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். எனினும், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீனவர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால், இம்முறை கச்சத்தீவு திருவிழாவைப் புறக்கணிப்பதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

20 வருடங்களின் பின்னர் 2002 ஆம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா மீண்டும் நடத்தப்பட்டது. இந்த திருவிழாவில் இருநாட்டிலும் இருந்து வருகை தந்த பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்றிருந்தனர்.அதனைத் தொடர்ந்து கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா வருடாந்தம் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கச்சத்தீவில் கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய தேவாலயம் கடந்த வருடம் யாழ். மறைமாவட்ட ஆயரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் தலைமன்னார் கிராமம், தலைமன்னார் பியர், பேசாலை, மன்னார், தாழ்வுபாடு சிலாபம் போன்ற கரையோரக் கிராமங்களைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள், கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவில் கலந்துகொள்வதற்காக  படகுமூலம் வந்திருந்தனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் ஏ.நடராஜன் திருவிழாவில் இந்திய மீனவர்கள் கலந்து கொள்ளாமை குறித்து தெரிவிக்கையில் :

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மீனவர் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காமையால் இம்முறை கச்சத்தீவு திருவிழாவைப்புறக்கணிப்பதாக தமிழக மீனவர்கள் அறிவித்துள்ளனம் என்றார்.

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்து கைப்பற்றப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் இந்திய மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்திய மீனவர் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் இந்திய மீனவர்கள் முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

இன்று தடுப்பூசி ஏற்றப்படும் இடங்கள்

Met. forecasts showers in several areas

Can Wesley upset Peterites?