கிசு கிசு

’13 வது கொரோனா மரணம்’ – சந்தேகத்தின் பேரில் ஒருவர் எரிப்பு

(UTV | நுவரெலியா) – நுவரெலியா நகரில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா தேசிய வைத்தியசாலையின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு உயிரிழந்துள்ள இவர் ஜா-எல கொடுகொட பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய சுப்ரலிங்கம் ஆனந்த குமார் எனும் ஒரு பிள்ளையின் தந்தையாவார்.

துபாய் நாட்டில், தனியார் நிறுவனமொன்றில் மனித வள ஆர்வாலராக பணியாற்றி வந்த நிலையில், கொவிட் 19 வைரஸ் பரவும் அச்சுறுத்தல் நிலைமை காரணமாக தொழிலில் இருந்து விலகி நாடு திரும்பும் நோக்கில் துபாய் நாட்டில் வசித்து வந்தார்.

நாடு திரும்புவதற்கு விமான சேவைகள் இருக்காததன் காரணமாக கடந்த 01ம் திகதி நாடு திரும்பிய நிலையில் சுப்ரலிங்கம் ஆனந்த குமார் நுவரெலியாவில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்தார்.

சுப்ரலிங்கம் ஆனந்த குமார் இருதய நோய் ம் அற்றும் சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர் என்றும், இவர் நாடு திரும்ப முன்னர் அவரது காலில் ஏற்பட்ட காயம் ஒன்றினூடாக கிருமி உட் சென்றுள்ள நிலையில் இதற்காக நுவரெலியா தேசிய வைத்தியசாலையில் கடந்த 02ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது இறுதிக் கிரியைகள் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் இன்று நுவரெலியா மா நகர சபை பொது மயானத்தில் கொவிட் 19 நோயாளியின் இறுதிக் கிரியை முறைப்படி நுவரெலியா வைத்தியசாலை அதிகாரிகள் குழுவினால் எரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் : வைத்திய அறிக்கை வெளியானது

சிறுமியின் தலையில் புகுந்த ஆணி

பத்திரிகையாளர் ஜமால் மறைமுக மரண தண்டனைக்கு பலியாகியுள்ளாரா?