உள்நாடு

13 ஆம் திகதி விடுமுறை இல்லை – ஆசிரியர்கள் விடுத்த கோரிக்கை.

(UTV | கொழும்பு) –

வடக்கு கிழக்கில் தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை விடுமுறை அறிவிக்கப்படாமை தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஞாயிறு தீபாவளி தினமாகும். தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை மத்திய மாகாணம், சப்ரகமுவ மாகாணம், ஊவா மாகாணம் ஆகியவற்றுக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவை தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
இந்நிலையில் இது தொடர்பில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தி குறிப்பில், எதிர்வரும் ஞாயிறு தீபாவளி தினமாகும். மறுநாள் திங்கள் அலுவலக நாளாகும். உலகத்தில் வாழும் பெருமாலான இந்துக்களுக்கு தீபாவளி தினமும் கௌரி விரதமும் மிகமுக்கியமானவை.

கௌரி விரதம் அனுஸ்டிக்கும் அடியார்களுக்கு திங்கள் கௌரி காப்பு வழங்கும் தினமாகும். மறுநாள் பாறணை நாள்.
திபாவளிக்கு மறுநாள் பதில் பாடசாலையுடன் விடுமுறை வழங்குமாறு கேட்கப்பட்ட வேண்டுகோள் இந்துத் தமிழர் செறிந்து வாழும் இடங்களின் அமைச்சுக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்காக சங்கம் கவலை தெரிவித்து அதிபர் ஆசிரியர்களில் பெருமளவானவர்கள் பெண்கள் என்பதோடு பாடசாலை மாணவர்களில் விரதம் அனுஸ்டிக்கும் மாணவிகளும் அதிகம் என்பதையும் வெளிக்காட்டியுள்ளது.

மாறாக விடுமுறை தேவையான பாடசாலைகளுக்கு அப்பாடசாலைகளின் அதிபர்கள் திங்களுக்கான விசேட விடுமுறையை வலயக் கல்வித் திணைக்களங்களிடம் அனுமதி பெற்று பதில் பாடசாலைக்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கான வழிமுறை உள்ளது. என்பதனை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பாடசாலைகளின் அதிபர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பாரம்பரிய மத கலாச்சாரங்களுக்கு மதிப்பளிப்பது எமது எல்லோருடைய கடமையுமாகும் என சங்கம் வினயத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஒற்றுமையில்லையேல் எதிர்க்காலத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் கிழக்கில் அதிகரிக்கும்

இன்று முதல் 20 – 30 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் ஆதரவு