சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் இன்று(03)

(UTV|COLOMBO) போதையிலிருந்து விடுதலைப் பெற்ற நாட்டிற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து உறுதிமொழியளிக்கும் ‘சித்திரை மாத உறுதிமொழி’ வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெறவுள்ளது.

இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை 08.15க்கு சர்வமத தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு, சுதந்திர சதுக்கத்தில் இடம்பெறவுள்ளதுடன், பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் சகல ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் இவ்வைபவத்தில் பங்குபற்றவுள்ளதுடன்  மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளும் இவ் வைபவத்தில் பங்குகொள்ளவுள்ளனர்.

இன்று காலை 08.30 முதல் 08.34 வரை அரச சேவையாளர்களும் பொதுமக்களும் சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், காலை 08.30 முதல் 08.32 வரை சிங்கள மொழியிலும் 08.32 முதல் 08.34 வரை தமிழ் மொழியிலும் உறுதிமொழி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களும் தமது பாடசாலைகளிலிருந்தவாறே சித்திரை மாத உறுதிமொழியுடன் இணைந்துகொள்ளவுள்ளனர்.

அதற்கமைய காலை 08.34 முதல் 08.36 வரை சிங்கள மொழியிலும் காலை 08.36 முதல் 08.38 வரை தமிழ் மொழியிலும் பாடசாலை மாணவர்கள் சித்திரை மாத உறுதிமொழியை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Related posts

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

கந்தக்காடு : பார்வையிடச் சென்றோரில் எவருக்கும் தொற்று இல்லை

10 ஆம் திகதி விவாதம்