சூடான செய்திகள் 1

சர்வதேச கூட்டுறவு முக்கியஸ்தர் இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்துடன் முக்கிய பேச்சு

(UTV|COLOMBO) சர்வதேச கூட்டுறவு பிரதிநிதித்துவ ஆராய்ச்சியாளர் கலாநிதி கிளாவுடியா சான்ஷான்ஸ் இலங்கைக்கான இளைஞர் கூட்டுறவு சம்மேளனத்தின் தலைவர் முஹம்மது ரியாஸுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டார்.

இலங்கையில் இளைஞர்களின் தற்போதைய வாழ்க்கை நிலை, வேலைவாய்ப்பு பிரச்சினை, தொழில் முன்னேற்றத்திற்கான கூட்டுறவு பங்களிப்பு , அரசாங்கத்தின் வகிபாகம் குறித்து இந்த சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் கூட்டுறவு துறையின் மூலம் இளைஞர் வலுவூட்டல் அமைப்பு நல்கி வரும் பங்களிப்பு குறித்தும் முஹம்மது ரியாஸ் அங்கு விளக்கினார்.

“இளைஞர்களை (COOP YES) கூட்டுறவு வழிமுறையில் உள்வாங்கி அவர்களுக்கான தொழில் வழிகாட்டல்கள் , தொழில் முயற்சி ஊக்குவிப்புக்களை நாடளாவிய ரீதியில் திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றோம்.”

“கண்டி , கொழும்பு மற்றும் குருநாகல் மாவட்டங்களில் இளைஞர் வலுவூட்டல் படையினை உருவாக்கி தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கின்றோம். 2020 களில் நாடு தழுவிய ரீதியில் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் (COOP – YES) இந்த அமைப்பு பயணிக்கின்றது அதுமட்டுமின்றி சர்வதேச உதவிகளான சிறந்த தொழில்நுட்ப பயிற்சி, கல்வி , நவீனத்துவ வழிக்காட்டல் , புலமைப்பரிசில்களை வழங்கும் வகையில் திட்டங்கள் அமைத்து செயற்படுகின்றோம்.” இவ்வாறு முஹம்மது ரியாஸ் தெரிவித்தார்.

 

 

 

Related posts

இவ்வருடத்தில் 2 சந்திரகிரகணங்கள் 3 சூரியகிரகணங்கள்

சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற 30 புகழிட கோரிக்கையாளர்கள் கைது

எரிபொருள் விலை குறித்த சூத்திரம் தொடர்பில் தீர்மானம் விரைவில்…