சூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் விடுத்துள்ள எச்சரிக்கை…

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தின் கண்ணியம் மற்றும் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான வார்த்தைகளை சபையினுள் பயன்படுத்த வேண்டாம் என சபாநாயகர் கருஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரித்துள்ளார்.

இதற்கமைய இன்றைய பாராளுமன்ற அமர்வு ஆரம்பமான வேளையே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் சில்வாவிற்கும் இடையே நேற்றைய தினம் ஏற்பட்ட கடுமையான கருத்து பரிமாறல்களை சுட்டிக்காட்டியே சபாநாயகர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

 

 

 

Related posts

சமூக இடைவௌியை பேணாதவர்களை கைது செய்ய நடவடிக்கை

கோட்டாபயவை கைது செய்வதற்கான தடை மேலும் நீடிப்பு

சிலாபத்திற்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம்