கேளிக்கை

(VIDEO)-ஏ.ஆர்.ரஹ்மானின் ‘மார்வெல் Anthem வெளியானது…

(UTV|INDIA) அவென்சர்ஸ் பட வரிசைக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது தெரிந்ததே. அந்த வகையில் வரும் ஏப்ரல் 26ஆம் திகதி  ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்தியாவில் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளதால் இந்த படத்திற்கென ‘மார்வெல் ஆன்ந்தம் என்ற பாடலை கம்போஸ் செய்ய சமீபத்தில் மார்வெல் இந்தியா, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்தது.

இந்த நிலையில் மார்வெல் இந்தியா, ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்து, பாடி, நடித்த ‘மார்வெல் ஆன்ந்தம்’ இந்தி பாடலை வெளியிட்டுள்ளது. 2 நிமிடங்கள் 45 வினாடிகள் உள்ள இந்த பாடல் வெளியான அடுத்த நொடியில் இருந்தே சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த பாடலை கேட்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.

மேலும் இந்த பாடலின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்பு மிக விரைவில் வெளியாகவிருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[/ot-video]

 

 

 

 

Related posts

பொள்ளாச்சி விருந்தினராக லாஸ்லியா

மூன்றரை லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸை பெற்ற சமந்தா லீக் செய்த போட்டோ

விலகினாரா அமலாபால்??