சூடான செய்திகள் 1

இன்று முதல் அதிவேக வீதியில் பஸ் கட்டணம் குறைப்பு

(UTV|COLOMBO) இன்று தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் பஸ்களின் கட்டணம் முதல் 20 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

அதன்பிரகாரம் தெற்கு அதிவேக வீதியின் மாக்கும்புர – காலிக்கான பஸ் கட்டணமாக 420 ரூபாவும், மாக்கும்புர – மாத்தறைக்கான பஸ் கட்டணமாக 530 ரூபாவும் அறவிடப்படவுள்ளது.

அதேவேளை, மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையத்திலிருந்து இன்று பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

மாகும்புர பன்முக போக்குவரத்து மத்திய நிலையம் நேற்று மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

கொழும்பில் இன்று அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்-பொலிஸ் மா அதிபர்

சிறைச்சாலைகளின் பாதுகாப்பு சம்பந்தமாக புதிய வேலைத்திட்டம் விரைவில்