விளையாட்டு

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 ஓட்டங்களால் வெற்றி

(UTV|INDIA) மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணிகளுக்கிடையே நேற்று இரவு இடம்பெற்ற இந்திய ப்ரீமியர் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதன் தலைவர் ரோஹித் சர்மா 48 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

பதிலுக்கு துடுப்பாடிய பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி சார்பாக ஏ.பி.டி வில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 70 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

 

 

 

 

Related posts

இலங்கை கிரிக்கெட்டில் திலங்க எந்த பதவியும் வகிக்க முடியாது

14 நிமிட நேரத்தை வீணடித்த நெய்மர்

‘பிபா’ தலைவருக்கு கொரோனா உறுதி