சூடான செய்திகள் 1

பேரூந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுத்தால் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்வோம்…

(UTV|COLOMBO) பேருந்து தொழிற்துறைக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்காது, பேருந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் மேற்கொண்டால் மேல் மாகாணத்தில் பாரிய பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் மேல் மாகாணத்தில் பயணிகள் பேருந்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள், இளம் நீல நிறத்தில் காணப்பட வேண்டும் என்று நிலவும் சட்டத்தை ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தவுள்ளதாக மேல் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் துசித குலரத்ன அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும் தமது சேவைக்கான வசதிகளை பெற்றுக்கொடுக்காது, பேருந்துகளுக்கு நீல நிறத்தை பயன்படுத்த அழுத்தம் கொடுத்தால் பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

உயர்தர பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை

ஜூலை முதலாம் திகதியில் இருந்து விஷேட தேவை உடையவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு

ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர் இலங்கை விஜயம்