சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது

(UTV|COLOMBO) போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் மீட்டியாகொட, கிரலகஹ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் வைத்து போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று இரவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 13உம், 100 ரூபா நாணயத்தாள்கள் 53உம் அச்சடிக்கும் இயந்திரமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

நிதி மோசடி செய்து சிக்கிய போலி வைத்தியர்

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு?

வெசாக் தின நிகழ்வுகள் நிமித்தம் அதிகபட்ச பாதுகாப்பு