சூடான செய்திகள் 1

கொழும்பில் முதன்முறையாக வீதி கடவைகளுக்கு சூரிய மின்ஒளி கட்டமைப்பு

(UTV|COLOMBO) நாட்டில் முதன்முறையாக சூரிய சக்தியை பயன்படுத்தி வீதி கடவை உள்ள இடங்களில் மின் ஒளிக்காக மின்குமிழ்கள் கட்டமைப்பு தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கு கொழும்பு மாநகர சபை அனுசரனை உதவியுள்ளது.

இதற்கிணங்க முதலாவது மின்குமிழ் கொழும்பு சி.டப்ளியூ. டப்ளியூ.கன்னங்கர மாவத்தையில் தெவட்டஹா பள்ளிவாசல் அருகாமையில் பொறுத்தப்பட்டுள்ளது. யாராவது ஒருவர் மஞ்சல் கடவை மூலம் வீதியை கடக்கும் பொழுது மஞ்சல் கடவை மின் ஒளி அலங்காரத்துக்கு உள்ளாகும். இதற்கு மேலதிகமாக வாகன சாரதிகளுக்கு அனர்த்த எச்சரிக்கை சமிஞ்சையும் விடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் கொழும்பு நகரத்தில் 23 இடங்களில் 46 சூரிய மின்குமிழ்கள் பொறுத்தப்படவுள்ளன. இதற்காக ஒரு கோடி 40 லட்சம் ரூபா செலவிடப்படவுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு வெப்பமான காலநிலை தொடரும்…

29 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1500 ரூபாய் வழங்குவேன் – சஜித்