சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு

(UTV|COLOMBO)   மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இதனை அறிவித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு, தெஹிவளை – கல்கிஸ்ஸை, கோட்டை, கடுவளை மாநாகர சபை அதிகார பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் கொலன்னாவ நகர சபை அதிகார பிரதேசங்களிலும் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

இதனுடன் கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை அதிகார பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு பிரதேசங்களிலும் குறித்த காலப்பகுதியில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் பயணித்த வாகனம் விபத்து;மூவர் காயம்

அமெரிக்க தூதரகத்தின் மீது ஈராக்கில் ரொக்கெட் தாக்குதல்

பெறுமதி வாய்ந்த போதை மாத்திரைகள் மீட்பு