வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு பிணை

(UTV|PAKISTAN) ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக பிணை வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த டிசம்பர் மாதம், லாகூரில் உள்ள கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டார்.

இருதய நோய், நீரிழிவு நோயால் அவதிப்பட்ட அவருக்கு சிறையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், மருத்துவமனையில் சேர்த்து உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில், நவாஸ் ஷெரீப்புக்கு பிணை வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரீப்புக்கு 6 வாரங்கள் பிணை வழங்கினர்.

பாகிஸ்தானுக்குள் எந்த பகுதியிலும் மருத்துவ சிகிச்சை பெறலாம், ஆனால், வெளிநாட்டுக்கு செல்லக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

Final verdict of Gamini Senarath’s case on Aug. 08

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய தகவல்!