சூடான செய்திகள் 1

நாணயக்குற்றிகளை விநியோகிக்க மத்திய வங்கியில் புதிய பிரிவு

(UTV|COLOMBO) நாணயக் குற்றிகளைப் பரிமாற்றம் செய்வதற்காக, இலங்கை மத்திய வங்கியின் தலைமைக் கிளையில் நாளை(27) புதிய பிரிவொன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொழும்பு ஜனாதிபதி மாவத்தை அமைந்துள்ள மத்திய வங்கியிலேயே, இப்பிரிவு திறந்து வைக்கப்படவுள்ளது.

பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர்ந்த, புதன் மற்றும் வியாழக்கிழமைகளில், காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரை இப்பிரிவு திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு ரூபா, 02, 05, 10 ரூபா ஆகிய நாணயக்குற்றிகள் விநியோகிக்கப்படும் என்பதோடு,
அவை 100 நாணயக்குற்றிகளைக் கொண்ட பொதிகளாக விநியோகிக்கப்படவுள்ளதுடன், அதிகபட்சமாக 20,000 ரூபா வரை நாணயக்குற்றிகளை மாற்றிப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாணயக்குற்றிகளை மொத்தமாகப் பெற்றுக்கொள்ள விரும்பும் தனிப்பட்ட நபரோ அல்லது அமைப்போ, இரு வேலைநாட்களுக்கு முன்னர் நாணயக்குற்றி விநியோகம் தொடர்பான அத்தியட்சகருக்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

யாழ். பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமைக்கு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தீர்மானம் பிற்போடப்பட்டது

ராஜீவ் காந்தி படுகொலை: இலங்கைக்கு நாடு கடத்த ஏற்பாடு(VIDEO)