விளையாட்டு

4 ஆயிரம் ரன்களை கடந்து கிறிஸ் கெய்ல் சாதனை

(UTV|INDIA) ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

இதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான ஜொஸ் பட்லரின் ஆட்டமிழப்பு தொடர்பில் அதிகம் விவாதிக்கப்படுகின்றது.

ஜெய்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் சார்பாக கிறிஸ் கெய்ல் 47 பந்துகளில் 79 ஓட்டங்களை விளாசினார்.

போட்டியில் கிறிஸ் கெய்ல் 6 ஓட்டங்களை பெற்றபோது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4000 ஓட்டங்களை கடந்த வீரராக பதிவாகினார்.

 

 

 

Related posts

லசித் மாலிங்க தொடர்பில் சச்சின் புகழாரம்!!

ஸ்மித், வார்னர் மீதான தடையை நீக்க முடியாது-அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்

ஐ.பி.எல் போட்டிகள் ஒத்திவைப்பு