(UTV|COLOMBO) தற்போது பதவி வெற்றிடமுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதியாக மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொட’வை நியமிக்க அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக சொலிசிடர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி யசந்த கோதாகொடவின் பெயர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.