விளையாட்டு

இரண்டாவது T-20 கிரிக்கட் போட்டி இன்று…

(UTV|COLOMBO) சுற்றுலா இலங்கை அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் இடையிலான 2வது 20க்கு 20 கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி, தென்னாபிரிக்காவின்  சென்சுரியனில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கு இடையில் முன்னதாக இடம்பெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்தநிலையில், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் உள்ளது.

இதேவேளை, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியும் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி சார்ஜாவில் இடம்பெறவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் ஒரு நாள் போட்டிகள் 5 இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

பொருளாதார நெருக்கடிக்கு உதவ இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானம்

மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் இலங்கைக்கு

இங்கிலாந்து லெஜண்ட்ஸ் அணிக்கு எதிராக ஆட்டம் காட்டிய டில்ஷான்