சூடான செய்திகள் 1வணிகம்

டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட கொழும்பு பொது நூலகம்

(UTV|COLOMBO) டிஜிட்டல் நூலக திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நூலகம் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப (ICTA) நிலையமும் தேசிய நூலகம் மற்றும் ஆவணசேவை சபையும் கல்வி அமைச்சும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இதன் கீழ் கொழும்பு பொது நூலகத்தின் மூலம் வாசகர்களுக்கு வழங்கப்படும் சேவைகள் பல டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டது. இதற்கமைவாக அனைத்து அங்கத்தவர்களுக்கும் கணனி மயப்படுத்தப்பட்ட நூலக அங்கத்தவர் இலக்கம் ஒன்று வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த இந்த டிஜிட்டல் மய நடவடிக்கை காரணமாக நூல்களை தெரிவு செய்வதற்கான காலம் குறைவடையும் எனவும், இணையத்தளத்தின் ஊடாக பத்திரிகைகளை வாசிப்பதற்கான வசதிகளும் கிட்டுவதுடன் உலகின் பிரபல சஞ்சிகைகள் உள்ளிட்டவற்றையும் இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றன..

 

 

 

 

Related posts

இராணுவ கோப்ரல் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்