சூடான செய்திகள் 1

இன்று(21) காலை முதல் மின்சாரம் தடை

(UTV|COLOMBO) இன்று(21) காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை, யாழ். பிரதேசத்தில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக கட்டமைப்புகளில் பராமரிப்பு பணிகளுக்காக இவ்வாறு மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபையின் வட மாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ். பிரதேசத்தில் யாழ். காங்கேசன்துறை, காங்கேசன்துறை கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், காங்கேசன்துறை வடக்கு கடற்படை முகாம், மயிலிட்டி, மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம், மயிலிட்டி கரிசன் ஐந்தாவது பொறியியல் படை முகாம் (புதியது), தையிட்டி, வறுத்தலைவிளான், வீமன்காமம், பலாலி, பலாலி இராணுவத் தலைமைக் காரியாலயம், பலாலி இலங்கை விமானப்படை முகாம், பலாலி விமானப்படை ஓய்வுகால விடுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

 

Related posts

சுதந்திர சதுக்கத்தை சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல்

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு