சூடான செய்திகள் 1

மே மதம் 15 – 21ம் திகதி வரையிலான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனம்…

( UTVNEWS | COLOMBO) – ஸ்ரீ பௌத்த வருடம் 2563 அரச வெசாக் வைபவத்தை இம்முறை வெசாக் நோன்மதி வேலைத்திட்டம் மே மாதம் 18ஆம் திகதி அன்று அரசாங்கத்தின் அனுசரணையுடன் காலி ஹிக்கடுவையில் அமைந்துள்ள தெல்வத்த தொட்டகமுவ புராண ரண்பத் ரஜமஹா விகாரையை கேந்திரமாகக் கொண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வைபவத்திற்கு அமைவாக காலி மாவட்டத்தில் விகாரைகளின் பௌதீக அபிவிருத்திக்காக வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தவதற்கும் போதைப்பொருள் அற்ற ஆன்மிக அபிவிருத்திக்கான சமூகத்தை உருவாக்குவதற்கு திடசங்கற்பம் கொள்ளும் வேலைத்திட்டத்தை நடத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

2019 மே மாதம் 15ஆம் திகதி தொடக்கம் 21 வரையிலான காலப்பகுதியை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துதல் மற்றும் அதற்கமைவாக நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள மேற்படி வேலைத்திட்டத்தை செயற்படுத்துவதற்காக பௌத்த சாசன மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அவர்கள் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தல்

4.4 மில்லியன் ரூபா பெறுமதியான பணத்துடன் தம்பதிகள் கைது

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராயும் குழுவின் அறிக்கை கையளிப்பு