வகைப்படுத்தப்படாத

போர்க்குற்ற வழக்கில் போஸ்னிய தலைவருக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை..

(UTVNEWS | BOSNIA) – போர்க்குற்றம் புரிந்த வழக்கில் போஸ்னிய அரசியல் தலைவருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிபதிகள் நேற்று(20) உறுதி செய்துள்ளனர்.

செர்பிய இன மக்களின் போராளியாக ரடோவன் கராட்சிக் செயற்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பாக அவர் விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

குறித்த இந்த வழக்கில் கடந்த 2016ம் ஆண்டு கராட்சிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதனை எதிர்த்து அவர் மேன்முறையீடு செய்த நிலையில் அதனை விசாரித்த நீதிபதிகள் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மீண்டும் உறுதி செய்துள்ளனர்.

ரஷ்யா உடைந்த பின் போஸ்னியாவில் அரசியல் தலைவராகவும், செர்பிய இன மக்களின் போராளியாகவும் ரடோவன் செயற்பட்ட 1995ம் ஆண்டு காலப்பகுயில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச சேவையில் பட்டதாரிகள்

இந்தோனேசிய கவர்னர் கைது

BCCI asks ICC to ensure no repeat of airplane messages